“ வி ரு ம் பி னே ன் ”
மலையாய் இருந்திட விரும்பினேன்......
மருங்காமல் அனைத்தையும் தாங்குவதினால்......
மடுவாய் இருந்திட விரும்பினேன்.....
மறுக்காமல் அனைத்தையும் தேக்குவதினால்......மழையாய் இருந்திட விரும்பினேன்.....
மண்ணுடன் அனைத்தையும் மகிழ்விப்பதினால்.....
கடலாய் இருந்திட விரும்பினேன்.....
காணும் இடமெல்லாம் பரவிக்கிடப்பதினால்.....
காற்றாய் இருந்திட விரும்பினேன்.....
காலம் தோறும் உயிரனங்கள் ஸுவாசிப்பதினால்.....
காட்டாற்று வெள்ளமாய் இருந்திட விரும்பினேன்.....
கட்டுப்பாடின்றி எங்கும் பாய்ந்து செல்வதினால்.....
தீயாய் இருந்திட விரும்பினேன்.......
தீண்டினால் சுட்டு எரிப்பதினால்......
மலராய் இருந்திட விரும்பினேன்......
மணங்களால் மனங்களை மகிழ்விப்பதினால்......
பறவையாய் பிறந்திட விரும்பினேன்......
பறந்து விரும்பிய இடங்களில் சிறகை விரிப்பதினால்....
ஆணாய் பிறந்திட விரும்பினேன்......
ஆணாதிக்கத்தை ஒழிக்கவேண்டி இருப்பதினால்.....
பெண்ணாய் பிறந்துவிட்டேன் பெற்றோர் விரும்பியதினால்....
“பெண்ணா இவள்” என்று உலகம்
வியக்கப்போவதினால்......
No comments:
Post a Comment