Wednesday, October 19, 2011

“அ ழ கி ன் ஆ த் தி ச் சூ டி”


  


                                         அன்பான அரவணைப்பு அழகு....


                                         ஆனந்தமான கண்ணீர் அழகு.....


                                         இறுக்கமான உறவுகள் அழகு....


                                         ஈயும் நல்ல உள்ளம் அழகு.....


                                         உழைப்பின் ஊதியம் அழகு.....


                                         ஊருக்காக உழைப்பதும் அழகு.....


                                        எத்தர்களை இனம் கொள்வது அழகு.....


                                        ஏக்கம் இல்லா வாழ்க்கை அழகு.....


                                        ஐயம் இல்லா நட்பு அழகு......


                                        ஒத்த எண்ணம் கொண்ட காதல் அழகு......


                                        ஓசை எழுப்பும் கடலின் சீற்றம் அழகு....


                                        ஔடதம் கொள்ளா உடல் அழகு....


                                       ‘ஃ’ தில்லா வீரம் அழகு......

Friday, October 7, 2011

தாய்மை

பத்து மாதங்கள் அவளுக்காக
எனக்குப் பிடித்த பல சின்ன சின்ன ஆசைகளைத்  தவிர்த்து....
குறையில்லாமல் நிறைவுடன் செய்து வந்த நான்.....
அவள் என் கர்பக்காவலிலிருந்து....
விடுபட்டு சுதந்திரமாய் வெளிவந்த நேரம்....
என்னுள் ஒரு ஊற்று....
பெருக்கெடுத்ததை நன்கு உணர்ந்தேன்.....

அவளின் பிஞ்சு விரல்களின் ஸ்பரிஸத்தால்.....
என்னுள் இருந்த “நான்” என்ற அகந்தை அகன்றுபோனது.....
என் இளம் வயது நினைவுகளான.....
என் தாயின் விரல்களை இறுகப்பிடித்த தருணங்கள் வந்து போயின.....

என்னை அறியாமல் என் கண்களின் ஓரங்களில் நீர் திவிலைகள்.....
என்னுள் அன்றுதான் உறைத்தது .....
“ஆனந்தக் கண்ணீர்” என்பது இது தான் என்பதனை.....
என் நினைவுகள் பின்னோக்கியும் முன்னோக்கியும் பயணித்த நேரத்தில்......
அன்று ஜன்னல் வழியே நான் கண்ட மறக்க முடியாத் காட்சி ஒன்று......
“ஒரு காகம் தன் குஞ்சிற்கு இரை ஊட்டிக்கொண்டு இருந்தது, சிறிது நேரம் கழித்து குஞ்சுக் காகம் “காகா” என்று கரைய, தாய் காகம் சலிப்பில்லாமல் அதற்கு இரை கொடுத்துக்கொண்டே இருந்தது, இந்தக் காட்சி வெகு நேரம் தொடர்ந்தது, எனக்குள் இருந்த “பொறுமை” தொலையத் தொடங்கியது, காகம் என்றால் கரையத்தானே செய்யும் எதற்கு இந்த காகம் இப்படி செய்துக் கொண்டே இருக்கின்றது என்று சற்று எரிச்சலும் தொற்றிக் கொண்டது என்னுள்”.....
இன்று அந்த காட்சியின் பொருள் உறைத்தது என்னுள் , நானும் கரைந்தேன் என் மகள் கரைய (அழ) ஆரம்பித்தவுடன், நானும் தயார் ஆனேன்  அவள் அழுகையை நிறுத்த சராசரி தாயாராய்......

இது தான் தாய்மையோ.....!!!
எங்கோ ஒரு பாடல் ஒலித்துக்கொண்டு இருந்தது “அழகிய கண்ணே”

 “யான் கொண்ட இன்ப உணர்வு பெறுக அனைவரும் ”


Monday, June 27, 2011

"தோழி”

                                   “அன்புத்தோழி”

எப்போது தோழியே......
என்னுள் நீ புகுந்து.....
என்னை நான் மறந்து....
எதைப் பற்றியும் சிந்தனை இல்லாமல்.....
என்றும் உன் நினைவுகளுடன்.....
எண் எழுத்து மறந்து போனது.....
என்றேனும் என் நிலைமை நின்னுள் தொடர்வது.....
எப்போது தோழியே.....

Tuesday, June 7, 2011

.” எ ன் னு ள் நா ன்”


என்ன ஒரு பிரம்மாண்ட படைப்பு நான்....
என்னால் முடிந்தவரை உன்னைத்தொட முயற்சித்தேன்...

என்னைப்போல் இன்னொருவனாஎன்று நோக்குமுன்னே...
என்னை முழுதுமாக மறைத்து ஆட்கொண்டாய்....
...
என்னெதிரில் இருப்பவைகளை மாயையாக்கி....
எனக்குள் பல கேள்விகளை உருவாக்கி....

என்னுள் இருந்த கர்வத்தைத் தகர்த்து....
எல்லாம் நீயென உணரவைத்து....

என்ன நடந்தாலும் கவலைப்படாமல் மலையென...
எந்தவித பற்றையும் தூசென உதறித்துறக்க இருந்த....

எனக்கு மறுபடியும் வாழ்வை அளித்து....
என்னுள் அறிவுத் தீ மூட்டி....

என்னை ஆட்கொண்ட பின்பும் ஏன்....
என்னை அனைத்திற்கும் ஆசைப்பட வைக்கின்றாய்....