இதன் பொருள் தான் என்ன?
இந்த ஒரு வார்த்தை சமீப காலமாக, ஏன் ஆண்களின் காதுகளில்
“நாராசமாகவும்”, பெண்களின் காதுகளில் “ரீங்காரமாகவும்” கேட்கின்றது?
அக்ஷயா என்றால் வளர்பவள் என்பதும், த்ரிதியை என்றால் பிறையின் மூன்றாம் நாள், இங்கு வளர்பிறையை பொருளாகக் கொள்ளல் வேண்டும்....
அக்ஷய திரிதியை என்றால் வளர்கின்ற (குறைந்திடாத) மூன்றாம் பிறை நாள் என்பது.....
பொதுவாக அமாவாசையைக் கழித்து வரும் நாட்கள் “வளர்பிறை” என்றும்..... பௌர்ணமிக்குப்பின் வருவது “தேய்பிறை” என்றும்.....
தொன்றுதொட்டு அழைக்கப்பட்டு வரும் ஒரு வழக்கம்....
அதிலும் வளர்பிறையின் மூன்றாம் பிறை, மிகவும் விசேஷம்.....
நாம் குழந்தைகளாக இருந்த போது பெரியவர்களால் என்றோ சொல்லப்பட்டதை மறந்திடாமல்.....
அந்த மூன்றாம் பிறையினைத் தேடி நாம் கட்டி இருக்கும் துணியிலிருந்து நூல் இழைகளை பறக்க விட்டு(புது உடைகள் கிடைக்கும்) மகிழ்ந்த காலங்கள் இன்றும் மகிழ்வாய் நம்மைத் துரத்திக்கொண்டுதான் இருக்கின்றன....
இந்த சித்திரை மாதம் வரும் திருதியை இன்னும் விசேஷமாகப் போற்றப் படுகின்றது....
”சில வரலாறுகள், சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரத்தின் த்ரிதியை நாளிலும், சில வரலாறுகள், வைகாசி மாதம் திருவாதிரையில் வரும் த்ரிதியை யிலும் இந்த அக்ஷயத்திரிதியை கொண்டாடப்பட்டு வந்ததாகக் கூறுகின்றன....
நம் நாட்டில் “சித்திரை” மாதத்தை வருடத்தின் தொடக்கம் எனக்கொண்டு, ஆரம்பிக்கும் எந்த ஒரு செயலும் சித்திரைக்குப் பின் தொடங்கவே விரும்புவார்கள்....
சித்திரை மாதம் சேமித்த பொருட்களை விற்று அதன் மூலம் ஆடை, ஆபரணங்கள், பசு, இவை போன்ற உப்புக்கல் முதல் வைரக்கல் வரையான செல்வங்களை வாங்கி அன்றைய வருடம் முழுதும் மகிழ்வாகச் செல்லவேண்டும் என்று விரும்பிவாங்கி மகிழ்வார்கள்....
வளர்பிறை அன்று முக்கியமாக அக்ஷய த்ருதி அன்று வாங்கி, செல்வத்தை சேமிப்பார்கள்....
“முக்கியமாக வெள்ளை நிறம் உகந்தது, கடவுளுக்கு வெள்ளை நிறத்துப் பூக்களினாலும், வெள்ளை பணியாரம், பால் போன்றவற்றைப் படைத்து, வெள்ளை ஆடைகளை (தூய்மை) உடுத்தி , கலைமகளின் ஆடையும், வெந்தாமரை மலரும் விசேஷமானவை என்பதனை நினைவில் கொள்ளும் வண்ணம் அனைவரும் “களங்கம்” இல்லாமல், “தூய்மையான” சிந்தனையுடன் இருக்க வேண்டி வணங்குவார்கள்....
நாளடைவில் , இவையே வியாபார நோக்கோடு தங்க நகைகளை வாங்கும் வண்ணம் செய்துவிட்டது என்பது தான் உண்மை....
இந்தப் பழக்கம் குறிப்பாக மராட்டியர்களிடம் அதிகமாகக் கொண்டாடப்பட்டு அவை கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து இடங்களில் பரவ ஆரம்பித்தது....
நல்லது எங்கு நடந்தாலும் வரவேற்க வேண்டியதே....
மராட்டியர்களின் முக்கிய நகரமான “மும்பை” பங்குச் சந்தையிலும், மற்ற வர்தகத்திலும் முன்னோடியாக இருப்பதினால், நம் தமிழ் நாட்டின் பெரும்பான்மை மக்கள் மும்பைக்கு குடி பெயர்ந்ததால் அங்கு இருக்கும் அனைத்தும் தமிழகத்திற்குப் பரிமாறப்பட்ட வழக்கங்களில் இந்த “அக்ஷயத்திரிதியை”யும் ஒன்றானது....
இதனால் “வியாபாரிகளுக்கு” கொண்டாட்டம்....
வாங்குபவர்களுக்குத் திண்டாட்டம்....
இன்று இருக்கும் விலைவாசியினில், இந்த மாதிரி ஒரு காரணங்களினால் தான் வருடத்திற்கு ஏதோ ஒரு வகையில் நகை சேமிக்கப்படுகின்றன, எனபதும் மறுக்கப்படாமல் உள்ளது....
பெண்கள் , குறிப்பாக திருமணம் ஆன பெண்கள் இதனைக் காரணம் காட்டி கணவர் மற்றும் பிறந்த வீடுகளில் அவர்களின் நிலையையும் மறந்து, பிடிவாதம் கொண்டு கேட்டும், அவர்களின் மீது கொண்ட அன்பினால் அவர்களும் மறுக்க முடியாமல் தங்கள் சக்திக்கும் மீறி செய்கின்றனர்....
நன்றாகத் நாட்களைத் தொடங்கி முதல் வருடம் தொடங்கி, பல வருடங்கள் மகிழ்வுடன் வாழ நகை வாங்கிமகிழ்வது மட்டும் அல்ல, அத்னையும் தாண்டி, நாம் கேட்டால் எதையும் செய்யத் துடிக்கும் அவர்களின் “வெள்ளை”யான அன்பு உள்ளத்தைப் புரிந்துக்கொண்டு செயல்படுங்கள், நானும் ஒரு பெண் என்ற உரிமையிலும், ஆதங்கத்திலும் கூற கடமைப்பட்டுள்ளேன்.....
No comments:
Post a Comment