Friday, May 30, 2014

”விடியல்களைத் தேடி”

விடியலுக்காகத் தங்களை மாய்த்துக்கொண்ட....
விடுதலைப் போராட்ட வீரர்களின்.....

விடா முயற்சியினால் மீட்கப்பட்ட நாம்....
விடாக்கொண்டர்களால் சின்னாபின்னப்பட்டு....

விடியா மூஞ்சிகளாய் விலையாகிப்போனோம்....
விடுபட முடியாமல் வீணாகியும் போனோம்....

விடியல் மீண்டும் கிடைத்திடுமா....?
விடை தேடும் அறியாமையினில் நாம் அனைவரும்....

விடிந்தால் விலக்க முடியாத தேர்வு....

விதி வழி என்று வீணான பேச்சை விரட்டி அடித்திட....
விழிப்புடன் பதிப்போம் நம் முத்திரைகளை....

விழி மூடிட முடியாமல் தொலைத்திட்ட .....

விலைமதிக்க முடியாத நித்திரையை நிறைவாய்ப் பெற்றிட....

”யாதும் ஆனாய் நீ”

அன்பு பொழிவதில் அன்னை ஆனாய் நீ....

ஆதரவு காட்டுவதில் தந்தை ஆனாய் நீ....

இதமாய்ப் பழகுவதில் உடன்பிறப்பானாய் நீ....

ஈடில்லா பாசத்தால் குழந்தை ஆனாய் நீ....

உள்ளம் கவர்வதில் கள்வன் ஆனாய் நீ....

ஊக்கம் அளிப்பதில் ஆசான் ஆனாய் நீ....

எளிதினில் பழகுவதில் நண்பன் ஆனாய் நீ....

ஏளனம் செய்வதில் எதிரி ஆனாய் நீ....

ஐக்கியம் ஆவதில் பக்தன் ஆனாய் நீ....

ஒருமைப்பாட்டில் தலைவன் ஆனாய் நீ....

ஓவியமாய் மிளிவதில் கலைஞன் ஆனாய் நீ.....

ஔடதமாய் காப்பதில் இறைவன் ஆனாய் நீ.....

அஃதும் இஃதுமாய் கலந்திருப்பவன் நீ....

உயிருடன் ஆய்தமாய் காப்பவன் நீ....

"செம்மையின் அடையாளம் செவிலியர்கள்”

பெண்களின் சிறப்புப் பண்புகளில் மிக முக்கியமான ஒன்று பொறுமை.... 
அவளைப் பெருமை சேர்க்கும் பண்பும் அது தான் என்றால் மிகையாகாது.....

எந்த பிரச்சனைகள் என்றாலும் அதனைப் பொறுமையுடன் ஆராய்ந்து , அதற்கான வழிமுறைகளைத் தேடி தீர்வுகாண்பவளும் பெண் தான்......
(பிரச்சனையே பெண் தான் என்பவர்களுக்கு தெரியும் அந்த பிரச்சனைக்குக் காரணமும், அதனை தீர்ப்பவளும் பெண் தான் என்பது).....

அதனால் தான், அந்த காலம் தொட்டே! பெண்களுக்கென்று சில வேலைகளை நியமித்து இருந்தார்கள் நம் முன்னோர்கள் காரணம் அவளின் உடல் வாகும், குணாதிசயங்களும்....

குழந்தைகளின் அன்றாடத் தேவைகளைத் தாயை விட யாரால் செய்துவிட முடியும் , குளிப்பாட்டி, சுத்தம் செய்து,உணவைப் புகட்டி, அறிவு வளர்த்து, விருப்பு வெறுப்புக்களை உணர்ந்து அதன் படி நல்ல ஆரோக்கியத்துடன் (உடல், மனம்) வளர்த்திட .....

தன் மக்களுக்குச் செய்யும் அதே தாய் (தாய்மை) மற்ற குழந்தைகள், உறவினர், சுற்றத்தார், முதியவர், இயலாமல் இருப்போர் போன்றவர்களுக்கும் செய்வதும் இலகுவாகிவிடுகின்றது.....

ஒரு பெண்ணால் பல அரிய வேலைகள், செயல்கள், தொழில்கள் என்று பல வகையிலும் மிளிரும் தன்மை இருந்தாலும், பெண்கள் பெரிதும் விரும்பி ஏற்கும் வேலை ஆசிரியைப் பணியும், செவிலிப் பணியும் தான் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருந்துவிட முடியாது எனபது என் உறுதியான எண்ணம்....

ஆசிரியைப் பணிக்கு “கல்வி அறிவு” மிகவும் அவசியமான ஒன்று 
(இன்று ப்ளஸ் டூ ஃபெயில் ஆனாலும் அடெம்ண்ட் மூலம் பாஸ் செய்து “டீசர்ஸ் ட்ரெய்னிங்”இல் அதிக பணம் கொடுத்துப் பணம் சேர்த்து , பெண்ணை அரசாங்க வேலைக்கு தயார் படுத்தும் காலம்.... பாவம் மாணவர்கள்)

அனைத்து சமூகத்தினர், படிப்பறிவு குறைந்த பலரால் ஆசிரியைப் பணியைச் சிறப்புடன் செய்துவிட முடியாது எனபதினால் பெரும்பாலும் பெண்கள் தேர்ந்தெடுக்கும் அடுத்த பணி “செவிலியர்” பணி......

“செவிலியர்” பணிக்கும் அடிப்படை படிப்பு இருந்தாலும் , செயல் முறை அறிவு அவர்களுக்கு அதிகம் கற்றுத்தரப்படும், அவசியமும் கூட..... அந்த செயல் முறையை வைத்துத்தான் அவர்களின் தரம், பதவி உயர்வு கணக்கெடுக்கப் படும்.....

செவிலியர் செவிலித்தாயிலிருந்து மருவி வந்த பெயராக இருந்திருக்கலாமோ என்ற ஐயம் எனக்கு எப்போதும் உண்டு.... 
ஆங்கிலத்தில் “நர்ஸ்” என்று பொதுவாக அழைக்கப்படும் வார்த்தை (பராமரிக்கும் பணியை செய்பவள் (குழந்தை முதல் முதியவர்வரை) )....
ஒருவரை ஒருவர் விளித்துக் கூற “சிஸ்டர்” என்பது வசதியாக இருந்தமையால், அந்தப் பெயர் இன்று பொதுப்பெயராயிற்று.....

அப்பாடா, இப்போது தான் கட்டுரையின் நடுப்பகுதிக்கு வர முடிந்தது, முகவுரையை முடித்து.....
நான் சிறுவயதாக இருந்த போது வியந்த பணியில், இந்த “நர்ஸ்” பணியும் ஒன்று.... 
எவ்வாறு இவள் ஒருத்தியே, அத்தனை நோயாளிகளின் குறைகளைக் கேட்டு அதனை பக்குவமாக அவர்களுக்குப் புரியவைத்து, மருத்துவரின் ஆலோசனை, அறிவுரையை அவர்களுக்கு உணர்த்தி, ஊசியை அவர்களுக்கு வலி தெரியாமல் பேச்சில் திசை திருப்பி, சிரித்த முகத்துடன் அனைவரையும் வழி அனுப்ப முடிகின்றது 
நான் கூறியது 25 வருடங்களுக்கு முன் என்பதையும் மறந்துவிட வேண்டாம்)

அவர்களால் விதைக்கப்பட்ட விதையோ என்னுள் மருத்துவம் படிக்கத் தூண்டியது (ஐயோ! நீங்க டாக்டரா என்று வாய் பிளக்க வேண்டாம்).... 
அந்த “சகிப்புத்தன்மை” என்னுள் பல மாற்றங்களை உருவாக்கியது.... 
என்னுள் உள்ள மென்மையும், எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் பாங்கும், எதிரே இருப்பவர்களின் மன ஓட்டத்தை அறிந்து அதன் படி பேசும் ஆற்றலும், முடியாமல் வருந்தும் எந்த உயிரையும் மதிக்கும் பண்பு என்று எவ்வளவோ அடுக்கிக் கொண்டே போகலாம்....

மேல் படிப்பு படித்து மருத்துவம் பார்க்க ஒரு இடம் அமைத்து அவரால் சிறப்பாகப் பணி செய்துவிட முடியுமா....? ( ஒரு ஆசிரியர், வக்கீல் இப்படிப் பல தொழில் தனி ஒரு மனிதனால் முடியும்).....

பணியில் அவர்கள் காட்டும் அக்கறை, அந்த பொதுநல எண்ணம், சகிப்புத்தன்மை, முகம் சுளிக்காமல் சிரித்த முகத்துடன் சேவை செய்யும் பாங்கு யாருக்கு வரும்....
(இப்போதும் சில மேலே கூறிய தகுதிகளில் ஒன்று கூட தம்முள் வளர்த்துக்கொள்ள முயலாமல் பணி என்ற பெயரில் “மனி” மட்டும் ஈட்டுவதில் குறியாக இருப்பவரும் இருக்கத்தான் செய்கின்றார்கள்) 
நாம் நல்ல மனிதர்களைக் கணக்கில் கொள்வோமே!

சரி...! தன்னை பிறருக்காகவே அர்பணித்து வாழ்க்கையை நடத்தும் அவர்களுக்கு சமூகம் கொடுக்கும் அந்தஸ்து தான் என்ன..... ?
நினைக்கவே அருவெறுப்பாக இருக்கின்றது, விலைமாதுவைவிட அவர்களை , அவர்களின் நடத்தைகளுக்கு விமர்சனம் கொடுத்து அவர்களை முத்திரைக்குத்தி அவமானப்படுத்துவது.....
ஒரு நல்ல அங்கீகாரம் கொடுக்க வேண்டிய சமூகம், ஏன் அவர்களில் சிலரின் குறைகளை மிகைப்படுத்தி ஒட்டு மொத்த “செவிலியர்களை” செவிகேட்க முடியாத அளவிற்கு விமர்சனம் செய்கின்றது....

“செய்யும் தொழிலே தெய்வம்” என்பதனை கருத்தினில் கொண்டு, அனைவரும் அவர்கள் செய்யும் பணிக்கு உண்டான மதிப்பையையும், அங்கீகாரத்தையும் தந்து தாழ்மை படுத்தும் எண்ணங்களை சலவை செய்து தூய எண்ணங்களுடன் வாழவேண்டும்......

அவர்களின் குறைகளைத் தவிர்த்து நிறைகளைப் போற்றிப் பாதுகாப்போம்,.....

வளரும் நம் சிந்தனையும், நாடும்....

மலரும் அவர்கள் அனைவரின் மனங்களும், முகங்களும்...

” நல்ல தோழி”


நயமாய் கடிந்து....
நக்கலாய் இடித்து....

நச்சென நடித்து.....

நமக்காகத் துடித்து....
நட்பை நன்றாக மதித்து....
நடைமுறைகளை உணரவைத்து....

நலலவைகளைப் பகிர்ந்து....
நயவஞ்சகத்தை அறிந்து....

நன்நடத்தைகளை வளர்த்து....
நடிப்பவர்களை புரியவைத்து....

நலிந்த போது தோள் கொடுத்து....
நம்பிக்கையை விதைத்து....

நரை முடி முளைத்த பின்பும்....
நழுவிடாமல் நட்புக்கரம் நீட்டுபவள்.....

”அல்லல் படு(த்து)ம் அக்ஷயத் த்ரிதியை “


இதன் பொருள் தான் என்ன?

இந்த ஒரு வார்த்தை சமீப காலமாக, ஏன் ஆண்களின் காதுகளில்
“நாராசமாகவும்”, பெண்களின் காதுகளில் “ரீங்காரமாகவும்” கேட்கின்றது?

அக்ஷயா என்றால் வளர்பவள் என்பதும், த்ரிதியை என்றால் பிறையின் மூன்றாம் நாள், இங்கு வளர்பிறையை  பொருளாகக் கொள்ளல் வேண்டும்....


அக்ஷய திரிதியை என்றால் வளர்கின்ற (குறைந்திடாத) மூன்றாம் பிறை நாள் என்பது.....

பொதுவாக அமாவாசையைக் கழித்து வரும் நாட்கள் “வளர்பிறை” என்றும்..... பௌர்ணமிக்குப்பின் வருவது “தேய்பிறை” என்றும்.....
தொன்றுதொட்டு அழைக்கப்பட்டு வரும் ஒரு வழக்கம்....

அதிலும் வளர்பிறையின் மூன்றாம் பிறை, மிகவும் விசேஷம்.....

நாம் குழந்தைகளாக இருந்த போது பெரியவர்களால் என்றோ சொல்லப்பட்டதை மறந்திடாமல்.....
அந்த மூன்றாம் பிறையினைத்  தேடி நாம் கட்டி இருக்கும் துணியிலிருந்து நூல் இழைகளை பறக்க விட்டு(புது உடைகள் கிடைக்கும்) மகிழ்ந்த காலங்கள் இன்றும் மகிழ்வாய் நம்மைத் துரத்திக்கொண்டுதான் இருக்கின்றன....

இந்த சித்திரை மாதம் வரும் திருதியை இன்னும் விசேஷமாகப் போற்றப் படுகின்றது....

”சில வரலாறுகள்,  சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரத்தின் த்ரிதியை நாளிலும், சில வரலாறுகள், வைகாசி மாதம் திருவாதிரையில் வரும் த்ரிதியை யிலும் இந்த அக்ஷயத்திரிதியை கொண்டாடப்பட்டு வந்ததாகக் கூறுகின்றன....

நம் நாட்டில் “சித்திரை” மாதத்தை வருடத்தின் தொடக்கம் எனக்கொண்டு, ஆரம்பிக்கும் எந்த ஒரு செயலும் சித்திரைக்குப் பின் தொடங்கவே விரும்புவார்கள்....

சித்திரை மாதம் சேமித்த பொருட்களை விற்று அதன் மூலம் ஆடை, ஆபரணங்கள், பசு, இவை போன்ற  உப்புக்கல்  முதல் வைரக்கல் வரையான செல்வங்களை வாங்கி அன்றைய வருடம் முழுதும் மகிழ்வாகச் செல்லவேண்டும் என்று விரும்பிவாங்கி மகிழ்வார்கள்....
 வளர்பிறை அன்று முக்கியமாக அக்ஷய த்ருதி அன்று வாங்கி, செல்வத்தை சேமிப்பார்கள்....

“முக்கியமாக வெள்ளை நிறம் உகந்தது, கடவுளுக்கு வெள்ளை நிறத்துப் பூக்களினாலும், வெள்ளை பணியாரம், பால் போன்றவற்றைப் படைத்து, வெள்ளை ஆடைகளை  (தூய்மை) உடுத்தி , கலைமகளின் ஆடையும், வெந்தாமரை மலரும் விசேஷமானவை என்பதனை நினைவில் கொள்ளும் வண்ணம் அனைவரும் “களங்கம்” இல்லாமல், “தூய்மையான” சிந்தனையுடன் இருக்க வேண்டி வணங்குவார்கள்....

நாளடைவில் , இவையே வியாபார நோக்கோடு தங்க நகைகளை வாங்கும் வண்ணம் செய்துவிட்டது என்பது தான் உண்மை....

இந்தப் பழக்கம் குறிப்பாக மராட்டியர்களிடம் அதிகமாகக் கொண்டாடப்பட்டு அவை கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து இடங்களில் பரவ ஆரம்பித்தது....
நல்லது எங்கு நடந்தாலும் வரவேற்க வேண்டியதே....

மராட்டியர்களின் முக்கிய நகரமான “மும்பை” பங்குச் சந்தையிலும், மற்ற வர்தகத்திலும் முன்னோடியாக இருப்பதினால், நம் தமிழ் நாட்டின் பெரும்பான்மை மக்கள் மும்பைக்கு குடி பெயர்ந்ததால் அங்கு இருக்கும் அனைத்தும் தமிழகத்திற்குப் பரிமாறப்பட்ட வழக்கங்களில் இந்த “அக்ஷயத்திரிதியை”யும் ஒன்றானது....

இதனால் “வியாபாரிகளுக்கு” கொண்டாட்டம்....
வாங்குபவர்களுக்குத் திண்டாட்டம்....

இன்று இருக்கும் விலைவாசியினில், இந்த மாதிரி ஒரு காரணங்களினால் தான் வருடத்திற்கு ஏதோ ஒரு வகையில் நகை சேமிக்கப்படுகின்றன, எனபதும் மறுக்கப்படாமல் உள்ளது....

பெண்கள் , குறிப்பாக திருமணம் ஆன பெண்கள் இதனைக் காரணம் காட்டி கணவர் மற்றும் பிறந்த வீடுகளில் அவர்களின் நிலையையும் மறந்து, பிடிவாதம் கொண்டு கேட்டும், அவர்களின் மீது கொண்ட அன்பினால் அவர்களும் மறுக்க முடியாமல் தங்கள் சக்திக்கும் மீறி செய்கின்றனர்....


நன்றாகத் நாட்களைத் தொடங்கி முதல் வருடம் தொடங்கி, பல வருடங்கள் மகிழ்வுடன் வாழ நகை வாங்கிமகிழ்வது மட்டும் அல்ல, அத்னையும் தாண்டி, நாம் கேட்டால் எதையும் செய்யத் துடிக்கும் அவர்களின் “வெள்ளை”யான அன்பு உள்ளத்தைப் புரிந்துக்கொண்டு செயல்படுங்கள், நானும் ஒரு பெண் என்ற உரிமையிலும், ஆதங்கத்திலும் கூற கடமைப்பட்டுள்ளேன்.....

”அல்லல் இன்றி அக்ஷய த்ரிதியைக் கொண்டாடுவோம்”

Monday, September 17, 2012

சோளம் நினைக்கையிலே......

என்னுள் கதிராய் முளைத்து....
உதிரா பூக்களாய் மலர்ந்து.... 
சதிராய் எங்கும் தெளித்து....
நான் மருங்கி நிற்கையிலே........ , 
சோளம் முறைத்துக் கூறியது,
“ என்னை முறைத்து

ப் பார்த்தது போதும்.....,
போற்றிப் பாடடி பெண்ணே”!.....

அவ்வளவு தான், மடை திறந்த வெள்ளமாய் இதோ தெம்மாங்கு பாட்டு......:

                                                        (பல்லவி)
                                       
                                        மஞ்சள் பல் அழகி.....
                                        மயக்கும் உடை அழகி....
                                        மண்ணில் நீ சாயும் வரை.....
                                        மங்காத சிரிப்பழகி.....                                         (மஞ்சள்)

                                                         (அனு பல்லவி)
                                     
                                        குழந்தை முதல் கிழவன் வரை.....
                                        கிள்ளத் துடிக்கும் உன் உருவம்.....
                                        ஏழை முதல் செல்வ்னதனும்.....
                                        ஏக்கமுடன் உருகும் உருவம்....                       (மஞ்சள்)
                                                       
                                                                 (சரணம்)


                                       உள்நாடு வெளிநாடு பேதமில்லை உன்னோடு.....
                                       
உன்னுடனே பல காலம் வாழ்க்கை நடத்தும் ஏழை நாடு....

                                         


                                       மறையாதடி உன் புகழ்.....
                                       மனிதன் மண்ணில் மறையும்                           (மஞ்சள்)

“ உயிர் ஜனித்து வா”

நீண்ட வாழ்க்கை உன்னுடன் களித்திட்ட 

காலத்தையும்....!

நீங்காத கனவுகளில் உளரிய காலத்தையும்....!



நீர் தெளித்துக் களித்து விளையாடிய காலத்தையும்......!

நீ பொய்க்கோபம் கொண்டு கடிந்திட்ட 





காலத்தையும்....!

நீ மடி சுமந்து எங்களை மகிழ்வித்த காலத்தையும்....!

நீ இன்றி நாங்கள் தவித்திட்ட காலத்தையும் சுமந்து....!

நீங்காத நினைவாய் எங்களுள் புதைந்திட்ட’ 





தந்தையே....!

நீ மடி சாய்ந்து நாங்கள் கூறும் கதைகள் கேட்க.....!

நீ மீண்டும் உயிர் ஜனித்து வா....!!!!